யாழில் இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன்- கின்னஸ் சாதனை முயற்சியில் பெற்றோர்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி அசத்தியுள்ளர்.

சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா காலநிலை, விலங்குகள், மின்னணு சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட சொற்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிக சாதாரணமாக கூறுகின்றார்.

தந்தை முச்சக்கர வண்டி ஓட்டுனராகவும் தாயார் குடும்ப பெண்ணகவும் உள்ள சாதாரண பின்னணி கொண்ட குடும்பமாக தர்ஷ்விகாவின் குடும்பமா உள்ளது.

இத்தகைய பின்னணியில் உள்ள சிறுமி இதுவரை பாடசாலை கல்வியை தொடங்காத நிலையில் அதிசிறந்த ஞாபக சக்தியை கொண்டுள்ளமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடயம் குறித்து யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை பெற்றோர் நேற்று நடத்தியிருந்தனர்.

குறித்த சிறுமியின் திறமையை வெளிக்கொண்டு வருவதுடன், அந்த ஆற்றலை உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply