
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேகொள்ளவுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து ஒரு மேம்பட்ட பாதுகாப்புக் குழு கொழும்புக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரும் முன், இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க இந்தியாவில் இருந்து ஒரு மேம்பட்ட பாதுகாப்புக் குழு கொழும்புக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்தியப் பிரதமரின் வருகையின் போது, கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்ய பொலிஸாருக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமரின் வருகைக்கான ஆயத்தமாக இன்று (2) பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.