யாழில் லொறியுடன் மோதி இளம் குடும்பஸ்தர் பலி!

யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஆவார்.

கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்த வேளையில் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு சென்ற வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் நடவடிக்கைக்காக டிப்பர் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன மருதங்கேணி பொலிஸாரால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply