முத்தையன்கட்டு பகுதியில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய வெதுப்பக்கம்- பொதுச்சுகாதார பரிசோதகர்களின் அதிரடி!

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது, மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோவிற்கும் அதிகமான உற்பத்தி பொருட்கள் அழிப்பு செய்யப்பட்ட சம்பவம் இன்றைய தினம் (17) இடம்பெற்றுள்ளது.

முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றிற்கு ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரியின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 25 கிலோகிராமிற்கு மேற்பட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழிப்பு செய்யப்பட்டது.

அத்துடன் குறித்த வெதுப்பகம் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வருவதனால் குறைபாடுகளை நிவர்த்தி செய்யப்படும் வரை மூடப்பட்டுள்ளது.

வெதுப்பகத்தில் உள்ள சுகாதார குறைபாடுகளை 10 நாட்களில் நிவர்த்தி செய்யப்படவேண்டும் எனவும், குறைபாடுகளை சார் செய்து விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுச்சுகாதார பரிசோதகர், வெதுப்பக உரிமையாளரை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply