
மத்துகம, தொலஹேன பகுதியில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (18) பகல் இடம்பெற்றுள்ளது.
மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்ட போதும் அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.