
எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.