ஆசிரியை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி- பொலிஸார் நடவடிக்கை!

மேலதிக வகுப்பு ஆசிரியை ஒருவர் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொலிஸ் கார்களுடன் பயணிப்பது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

இது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த ஆசிரியை ஒருவரே இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறித்த ஆசிரியை தனது தனிப்பட்ட பிம்பத்தை உருவாக்குவதற்காக இந்த பொலிஸ் வளங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply