
பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.