
யாழ். யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் விடுதலை செய்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் நேற்றையதினம் (23) அனுமதி வழங்கியுள்ளது.
யூடியூபர் கிருஷ்ணா மீதான வழக்கு விசாரணை நேற்று (23) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
SK Vlog என்ற பெயரில் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி, புலம்பெயர் தமிழர்களிடம் நிதி பெற்று தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவி வருவதாக காட்டிக்கொள்ளும் யூடியூபர் கிருஸ்ணா, யுவதி ஒருவர் தொடர்பில் காணொளி வெளியிட்டு சிக்கலில் மாடிக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவரது விளக்கமறியல் திகதிகள் நிறைவுற்ற நிலையில், தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும் அவருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் நேற்றையதினம் (23) அவரின் விளக்கமறியல் திகதி நிறைவுற்றதை அடுத்து, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.