தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மே 7ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மே 04ஆம் திகதிக்குள் கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்களிப்பு நிலைய தயார்படுத்தலுக்காக பாடசாலையில் உள்ள மேசைகள், நாற்காலிகள், அரங்குகள் முதலான தேவையான வசதிகளை மேற்கொள்ளுவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply