வவுனியாவில் கண் மருத்துவமனை மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆளுநரால் திறந்துவைப்பு

வவுனியாவில் கண் மருத்துவமனை மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றை வடக்கு மாகாண ஆளுநர்.பி.எம்.எஸ். சாள்ஸ் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன கலந்து கொண்டிருந்தார்.

வவுனியா மரக்காரம்பளையில் அமைந்துள்ள ஆனந்தி பால்பொருள் உற்பத்தி நிறுவனம் மற்றும் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள ஆனந்தி கண் மருத்துவமனை ஆகியன அந்நிறுவனத்தின் பணிப்பாளரும், வைத்தியருமான வேலாயுதம் சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், இரண்டு நிறுவனங்களையும் திறந்து வைத்து அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டிருந்தனர். நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசன், வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன் மற்றும் வவுனியா வர்த்தக சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir