இத்தாலியின் வட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான மிலானில் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வீதியோரங்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால், பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் மேலே விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு நேர் மாறாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள பலேர்மோ நகரில் 48 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் அருகேயுள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
காலநிலை மாற்றத்தால் இத்தாலி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.