மனிதப் படுகொலை குற்றவாளிகளான கோட்டாபய மற்றும் பிள்ளையானை தூக்கிலிட வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றச் செயல் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என சனல் 4 தொலைக்காட்சி அடையாளம் காட்டியுள்ள கோட்டாபயவும், பிள்ளையானும் மறுப்பு அறிக்கைகளை விட்டுத் தப்ப முயல்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், தற்போதைய  இராஜாங்க அமைச்சர் பிள்ளையானும் மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகள். அவர்கள் இருவரையும் தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

அவர்களைப் பாதுகாக்க இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கக்கூடாது எனவும், அதேவேளை, சனல் 4 தெலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள ஆணைக்குழுவும், அரசாங்கம் நியமிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் கோட்டாபயவையும், பிள்ளையானையும் காப்பாற்றுவதற்கான திட்டங்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் இன்று சர்வதேச சமூகத்தின் முழுக் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனவே, இது தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ரணில் இடமளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதைவிடுத்துத் தூக்கிலிடப்பட வேண்டிய மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகளான கோட்டாபயவையும், பிள்ளையானையும் பாதுகாக்க முயற்சிக்கக்கூடாது என கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கோட்டாபய, பிள்ளையான் மட்டுமல்ல உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பாதுகாப்புத் தரப்பினர், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோருக்கும் உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply