
இலங்கையில் குரங்குகளை பிடிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தா தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குரங்குகளால் நாட்டில் உள்ள பல பகுதிகளின் விவசாய நடவடிக்கை பெருமளவில் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும், விவசாய பயிர்ச் செய்கையை பாதுகாக்கும் வகையிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிடிபட்ட குரங்குகளைக் கொண்டு சென்று விடுவிப்பதற்கு ஒரு தீவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆராய்ச்சித் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது முழுமையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரணவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.டி.லால் காந்தா தெரிவித்துள்ளார்.