
உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் 8, 9, 13, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.