களுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு 16 வயது மாணவியை அழைத்துச் சென்ற 29 வயதுடைய பிரதான சந்தேகநபர், இன்று அதிகாலை ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை – காலி பிரதான வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் புகையிரதப் பாதைக்கு அருகில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து களுத்துறைத் தெற்குப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி களுத்துறை நாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அவர்களுடன் மற்றுமொரு யுவதியும் ஆணும் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், கூட வந்த இருவரும் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர். பிரதான சந்தேக நபர் சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு ஹோட்டலை விட்டு வெளியேறியதை ஹோட்டல் ஊழியர்கள் அவதானித்துள்ளனர்.
அதன்பின்னர், ஹோட்டலுக்கு வந்த நபர் ஒருவர், ஹோட்டலுக்கு அருகில் உள்ள ரயில் பாதையில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக ஹோட்டல் ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து, குறித்த மாடவியுடன் ஹோட்டலுக்கு சென்ற இளம் தம்பதியையும் காரின் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை மே 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர், களுத்துறை, இசுறு உயன பிரதேசத்தைச் சேர்ந்த தனுஷ்க கயான் சஹபந்து என்ற பிரதான சந்தேக நபர் ஹிக்கடுவ பிரதேசத்தில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
T01