நாசிப் படைகளைப் போல ரஷ்யாவும் தோற்கடிக்கப்படும்!

ஹிட்லரின் நாசிப் படைகள் தோற்கடிக்கப்பட்டதைப் போன்று ரஷ்யாவும் போரில் தோற்கடிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், இரண்டாம் உலகப்போரில் நேசப் படைகளிடம் ஜேர்மனி சரணடைந்ததை நினைவு கூரும் நிகழ்விலே ஜெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் உரை நிகழ்த்திய ஜெலென்ஸ்கி, 1945 இல் கூட்டாக இணைந்து நாசிப்படைகளை எவ்வாறு வீழ்த்தினார்களோ, அதேபோல தற்போது தீயசக்தியாக உள்ள ரஷ்யாவும் போரில் வீழ்த்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ரஷ்யா உக்ரைனுக்கு அனுப்பிய 36 ஆளில்லாத் தாக்குதல் விமானங்களைத் தடுத்து அழித்திருப்பதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply