எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (26) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.