கனடா நாட்டின்13 மாகாணங்களில் காட்டுத்தீ பரவலாகப் பரவி வருகின்றது.
இதனால்,இதுவரையில் 67 இலட்சம் ஏக்கர் காடுகள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 29 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், கனடாவின் கூபெக் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.