தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று(08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.