மோடியை சந்திக்க ரணிலுடன் இந்தியா பயணமாகிறார் ஜீவன் தொண்டமான்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இன்று ஜனாதிபதியின் இந்தியா பயணம் உறுதியாகியுள்ள நிலையில் ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர்.

இதேவேளை, இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போது மலையகம் – 200 தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மலையகம் – 200 நிகழ்வுக்கு இந்திய பிரதிநிதிகளை அழைப்பதற்கான கோரிக்கையும் விடுக்கப்படும் என தெரியவருகின்றது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply