மின்சாரம் தாக்கி கூரை திருத்தும் வேலையில் ஈடுபட்ட தச்சு தொழிலாளர் இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் மின்சார தாக்கியதில் தச்சு தொழிலாளர்கள் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருதயபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ரொக்கி சைய்டே மற்றும் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 25 வயதுடைய ஞானபிரகாசம் கோடிசன் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அமிர்தகழி பாடசாலை வீதியிலுள்ள மேல்மாடி வீட்டின் ஒருபகுதில் இன்று காலையில் 3 தச்சு தொழிலாளர்கள் கூரையில் திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது பகல் 11 மணியளவில் கூரையின் இருந்த தகரம் கழன்று வீதியில் இருந்து வீட்டிற்கு வரும் மின்சார வயரினை வெட்டியதையடுத்து தொழிலாளர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து 1919 அவசர அம்புயூலன்ஸ் சேவைக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் சென்று பரிசோதித்தில் இருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து காயமடைந்த 25 வயதுடைய இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply