ஹராரே விளையாட்டு மைதானப் பகுதியில் தீ விபத்து

ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மைதானத்தின் தெற்கு பகுதியில் குறித்த தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் நெதர்லாந்திற்கு எதிராக ஜிம்பாப்வே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் குறித்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து, அடுத்த போட்டிகளுக்கு குறித்த மைதானத்தை பயன்படுத்தலாமா? என்பது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply