காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் நகரம் பதிவாகியுள்ளது.
சுவிஸ்ஸர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம், உலகளவில் காற்றின் தரம் குறித்து, ஆய்வொன்றை மேற்கொண்டு தகவலை வெளியிட்டு வருகின்றது.
ஆய்வின்படி, கனடாவின் மாண்டிரியல் நகரில் உலகிலேயே மிக மோசமான அளவில் காற்று மாசுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், மாண்டிரியலில் புகழ் பெற்ற அயர்ன்மேன் டிரையத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டதுடன், விளையாட்டு திடல்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, கனடாவில் காட்டுத்தீ ஏற்பட்ட இடங்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.