மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பிரதான பரிசோதகரான பாணந்துறை கல்துட பெலவத்தையைச் சேர்ந்த ஜகத் சமிந்த பெரேரா என்ற 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் பரிசோதகரை எதிரே வந்த பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.