இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை இன்று (11) சந்தித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பாக வெளிவிவகாரச் செயலாளர் வினய் மோகன் குவத்ராவுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (10) இரவு இலங்கை வந்தடைந்தார்.
இதேவேளை, வினய் மோகன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.