இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி பீடி இலைகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த இருவர் விஜய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், பீடி இலைகளுடன் கற்பிட்டி சின்ன அரிச்சல் கலப்பில் வைத்து இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பைபர் படகு ஒன்றும் அதில் காணப்பட்ட சுமார் 35 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிவாய்ந்த 16 உறைகளில் 530 கிலோகிராம் பீடி இலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், பீடி இலைகளைக் கடத்தி வந்த பைபர் படகு என்பவற்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.