ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட விசேட வர்த்தமானி!

மின்சாரம் விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பொற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானியில் அறிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்காக அத்தியாவசியமான சேவைகளுக்கு பாதிப்பு அல்லது இடையூறுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply