நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மார்ச் 9, 2023 இல் உள்ளாட்சித் தேர்தலை முன்னர் திட்டமிட்டபடி நடத்தத் தவறியதன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று அறிவிக்க உத்தரவிடுமாறு கோரி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை ஆகியவற்றால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று நீதியரசர் புவனேக அலுவிஹாரே தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எவ்வாறாயினும், நீதியரசர் குழுவில் அங்கம் வகிக்கும் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, அவ்வேளையில் மற்றுமொரு வழக்கு விசாரணையில் பங்குபற்றியிருந்தமையினால், மனுக்கள் மீதான பரிசீலனையை ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்தது.