கனடாவின் கருத்தை மீண்டும் நிராகரித்த இலங்கை!

கனடாவின் கருத்தை நிராகரித்து இலங்கை அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாக, வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் உள்ளடக்கியிருந்த, தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் தொடர்பான கூற்றை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது, உள்ளூர் வாக்கு வங்கி மற்றும் தேர்தல் இலாபங்களை மட்டுமே இலக்காகக் கொண்டதுடன், பரந்த இன நல்லிணக்க இலக்குகளுக்கு உகந்ததல்ல என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பாரம்பரியத்தை கொண்ட சமூகங்களுக்கும் இடையே ஸ்திரத்தன்மை, முன்னேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கனடா மற்றும் அதன் தலைவர்களை இலங்கை கோருவதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply