யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அதனடிப்படையில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
அதனையடுத்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு இன்று காலை சென்று பார்வையிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply