இலங்கை ஜப்பான் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்!

இலங்கை மின்சார சபைக்கும் ஜப்பான் மின்சார தகவல் நிலையத்திற்கும் இடையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை 2018 ஆம் ஆண்டு முதல் ஜப்பான் மின்சார தகவல் மையத்துடன் ஒத்துழைத்து வருகிறது, மேலும் 2019 இல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அவதானிப்புகளுக்கு அமைய, அதற்கான உத்தேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply