மைத்திரி மற்றும் கோட்டாபயவால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் – வெளியான இரகசியம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கு பணம் வழங்கியதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்த காலத்தில் அவர்களுக்கு மில்லியன் கணக்கான நிதி வழங்கப்பட்டதாகவும், அது மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவினால் குறைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலில் மூன்று மில்லியன் முதல் ஆறு மில்லியன் வரை வழங்கப்பட்ட பணம் பின்னர் பெருமளவில் குறைக்கப்பட்டதாகவும் அசாத் மௌலானா கூறியுள்ளார்.

கட்சியின் சார்பில் கொடுப்பனவுகளை சேகரித்து, கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கையளித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் போலிப் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரியாது எனவும் மௌலானா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கொழும்பு மற்றும் ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர அலுவலகங்களிற்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வழங்கிய ஆதரவிற்காக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமக்கு உதவியமை இரகசியமல்ல என நாடாளுமன்றில் பிள்ளையான் தெரிவித்திருந்தார்

எவ்வாறாயினும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவர் கடுமையாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply