இலங்கை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சி.டி.விக்ரமரத்ன,மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக அவருக்கு 3 மாத கால நீடிப்பு வழங்கியிருந்தார்.
பின்னர் முதல் சேவை நீடிப்பு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் 09 ஆம் திகதி மேலும் மூன்று மாத காலத்திற்கு இரண்டாவது சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையிலேயே இரண்டாவது சேவை நீடிப்பும் நிறைவடையவுள்ள நிலையில், மீண்டும் அவரே நியமிக்கப்படுவாரா அல்லது புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவரா என்பது தொடர்பில் இது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.