ஹம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் நேற்று ஹபராதுவவில், மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரத்கம, கட்டுடம்பே பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த கொலைகள் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.