டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுரகுமார!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை இன்று காலை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் மேலும் ஆழப்படுத்தப்படுவதன் மூலம் பெறக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதேவேளை, இந்தியா, எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இருக்கும் என்று இந்திய அமைச்சர் உறுதியளித்தார்.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில்,மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சிரேஷ்ட சட்டத்தரணி விஜித ஹேரத், செயலாளர் நிஹால் அபேசிங்க மற்றும் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் அடங்கிய மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று அதிகாலை இந்தியாவின் டெல்லிக்கு சென்றுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply