மனைவியைத் தாக்கி கொலைசெய்த கணவர் கைது!

மிஹிந்தலை பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது 23 வயது மனைவியை மொட்டையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை, கெலே திரப்பனய, இஹலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், 32 வயதான குறித்த  கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply