அறுவடை செய்யப்பட்ட நெல் சந்தையை வந்தடைந்த போதும் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், ஒரு கிலோ நெல்லின் விலை 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் போராட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்காததுடன், நெல்லை கொள்முதல் செய்யும் செயல்முறையையும் இன்னும் தொடங்காமல் உள்ள நிலையில், நெல்லுக்கு உத்தரவாத விலையை அவசரமாக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்ட அமைப்பின் தேசிய அமைப்பாளர் விமல் வத்துஹேவா தெரிவித்தார்.
திருகோணமலைப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் தற்போது சந்தைக்கு வந்து கொண்டிருப்பதாகவும், அதன்படி, சிவப்பு பச்சை நெல் ஒரு கிலோ 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், மற்ற வகை நெல் 110 ரூபாய் முதல் 115 ரூபாய் எனும் மிகவும் குறைந்த விலையிலும் வாங்கப்படுவதாக அவர் கூறினார்.
அரிசியின் விலை தற்போது மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறிய அவர், விவசாயிகளின் அறுவடைகள் குறைந்த விலையில் வாங்கப்படுவதனை சுட்டிக்காடினார்.