ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பமாக உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அதன்படி, முதலில் ஜெய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேயவிற்குச் சென்று அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரிடம் ஆசி பெற கட்சி முடிவு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, கிராமப்புறத் தலைவர்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியான பொதுக் கூட்டங்களை நடாத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை ( 25) தொடங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், எனினும் அந்தப் பகுதியில் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, எதிர்வரும் வாரம் பிரசார நடவடிக்கைகளைத் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply