நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தேங்காய் மரங்களை வெட்டுவதற்கு முன்பு தனிநபர்கள், எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய கொள்கையை தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை பணிப்பாளர் சமன் ஹேவகே தெரிவித்துள்ளார்.
தெங்கு உற்பத்தி நில பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
1.ஒரு ஏக்கருக்கு மேல் விவசாய நிலத்தை ஏலம் எடுப்பது அல்லது துண்டு பிரிப்பு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
2.ஒரு ஏக்கருக்கு மேல் நிலத்தை வேறு திட்டங்களுக்கு மறுபயன்பாடு செய்ய வேண்டுமானால் தெங்கு தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, பிரதேச செயலகம் அல்லது பிற தொடர்புடைய அரசு நிறுவனங்கள் நடத்தும் முழுமையான ஆய்வுக்குப் பின்னரே ஒப்புதல் அளிக்கப்படும்.
நில உரிமையாளர்கள் 10 ஏக்கருக்கும் குறைவான நிலங்களை ஏலத்தில் விட இதற்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த போதும் தற்போது இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. மேலும் இந்த மாற்றங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் திருத்தங்களாக முன்வைக்க தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.