இலங்கையில் வவுனியா, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, மட்டக்களப்பு, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (23) காற்றின் தர அளவு நன்றாக இருந்ததாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி, காலி, பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் மிதமான அளவு காணப்பட்டதாகவும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச காற்று தரக் குறியீடு (AQI) அளவுகள், பொதுவாக உச்ச போக்குவரத்து நேரங்களில் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஏற்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இலங்கையின் காற்றின் தரக் குறியீடு (SL AQI) அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான நகரங்களில் நல்ல மட்டத்தில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.