
தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தை விடவும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த வருடம் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் , இந்த காலப்பகுதியில் நாட்டின் சராசரி மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புவி வெப்பமடைதல் அதிகரித்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், காலநிலை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.