
பாணந்துறை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில், பின்வத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே ஐந்து ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்து வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பின்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.