
நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால், அதைத் தடுக்க தனிநபர் பிரேரணையைக் கொண்டு வருவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய அவர், தவறான அறிக்கைகளை வெளியிட விரும்பாத அனைவரும் இந்த பிரேரணைக்கு வாக்களிப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.