
கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் முடக்கப்பட்டிருப்பினும், அவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, இலங்கை பொலிஸார் சந்தேகநபர் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் இந்திய பாதுகாப்பு படையினருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.