
யாழில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நேற்று (27) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புன்னாலைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் புகையிலை கன்றுகளுக்கு மத்தியில் மிக சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா செடி கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சுன்னாக பொலிஸார் சந்தேக நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.