
ஊருஹெர பகுதியில் சட்டவிரோதமான முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹொரணை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை, தனமல்வில தலைமையக பொலிஸ்நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேகொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கஞ்சா தோட்டம் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா தோட்டத்தில் சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு பயிரிடப்பட்ட சுமார் இருபத்தைந்தாயிரம் கஞ்சா மரங்கள் இருந்ததாகவும், அவை அனைத்தும் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.