
தனியார் பேருந்து சாரதி ஒருவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியமைக்காக, சாரதியின் சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ உத்தரவிட்டார்.
அத்துடன் மேலதிகமாக ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வேதநாகம் எட்வின் நிமல் என்ற தனியார் பேருந்து சாரதிக்கே குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து, பாணந்துறை நல்லுருவப் பகுதியில் நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சாரதி மது அருந்தியிருந்தமையை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக அவரை கடுமையாக எச்சரித்த பின்னர் தலைமை நீதிபதி நேற்று குறித்த தண்டனையை விதித்தார்.