
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டம் மற்றும் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இதன் மற்றொரு கட்டம் இன்று (04) நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் இரத்தினபுரியைச் சேர்ந்த சிரேஷ் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இதன்போது தேர்தல் தகராறுகளைத் தீர்ப்பது குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் பல கட்டங்கள் சமீபத்தில் பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்டிருந்ததுடன், இந்த திட்டங்கள் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் நடாத்தப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.