பொன்விழா காணும் யாழ். பல்கலை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘வேரிலிருந்து விழுது வரை இணையும் பொன்விழா சங்கமம்’ நிகழ்வானது எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பல்கலையில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், 50ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக பொன்விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பண்பாட்டு நடைபவனி, குருதிக்கொடை நிகழ்வு, பொன்விழா மலர் வெளியீடு, ஓய்வுநிலைப் பேராசான்களையும் கல்விசாரா ஊழியர்களையும் கெளரவித்தல், கலை நிகழ்வுகள் விளையாட்டுகள், ஒன்றுகூடலும் இரவு விருந்துபசாரமும் உள்ளடங்களான பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

சிறப்பு நிகழ்வாக எதிர்வரும் 26 ஆம் திகதி பொற்கலை மலர் வெளியீடு மற்றும் கௌரவிப்பு நிகழ்வும், 27 ஆம் திகதி வாகீசன் இசைக்குழுவினரின் வீணை வாத்திய பிருந்தா நிகழ்வும் 28ஆம் திகதி கலைமாமணி திருமதி கோபிகா வர்மா(தமிழ்நாடு) வழங்கும் மோகினி நடன நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வுகளுக்கு தாய்த்தேசத்திலுள்ள பழைய மாணவர்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலுள்ள பழைய மாணவர்களையும் ஒன்றிணையுமாறும் விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply